Monday, March 13, 2017

படித்ததில் பிடித்தது : இப்பொழுது குழந்தைகளுக்கும் இளையோருக்கும் சர்க்கரை நோய்


கடல் தாண்டி பிழைக்கச் சென்ற ஒரு மனிதரை, வேலை செய்யவிடாமல், கைப்பேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அழைப்பை ஏற்றுப் பேசியவர், உடனே நாடு திரும்புகிறார்.

அங்கே, ஓடியாடி விளையாட வேண்டிய, தன், 8 வயது மகள் உடலில் சர்க்கரை அளவு அதிகமாகி, அவசரச் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் நிலை கண்டு, கண்ணீர் வடித்து நிற்கிறார்.

மற்றொரு பக்கம், சி.பி.எஸ்.., எனப்படும் மத்திய கல்வி வாரியம், 'டைப் - 1 நீரிழிவு நோயால் பாதிப்புக்குள்ளாகிய, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வின் நடுவே, சர்க்கரை, மாத்திரை, பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் உட்கொள்ளலாம்' என, அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது

இவை, என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கின. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, நோய் எதிர்ப்பு சக்தியுடைய, நம், நாட்டு மாடுகளின் மூலம் கிடைக்கும் சத்து மிகுந்த பாலின் மகத்துவத்தை அறிந்து கொண்டோம். அதே நேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத, வெளிநாட்டு, 'ஜெர்சி' பசுக்கள் மூலம் கிடைக்கும் பாலைப் பருகினால், சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள், ஏற்படும் என்றும் தெரிந்து கொண்டோம். அறிந்து கொண்டதோடு மட்டும் நிற்காமல், நாமும், நாட்டு மாட்டின் பாலைப் பருக ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என, பாரபட்சமின்றி சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படுவதற்கு, ஜெர்சி பசுக்களின் பால் மட்டும் தான், காரணமா என, யோசித்தால், இல்லை என்றே தோன்றுகிறது.

ஏனென்றால், ஜெர்சி பசுக்களின் மூலம் கிடைக்கும் பாலோடு, பூஸ்ட், காம்ப்ளான், ஹார்லிக்ஸ் என, ஏதாவது ஒரு சத்துப் பொடியை கலந்து குடிக்கிறோம். 'இதை கலந்து குடித்தால் மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்; உயரம் அதிகமாகும்; சக்தி கிடைக்கும்' என, விளம்பரம் செய்கின்றனர். அதை நம்பி, நாமும் உபயோகப்படுத்துகிறோம். ஆனால், ஒன்றை, யோசிக்கத் தவறிவிட்டோம். அது என்னவென்றால், இதை பருகிய மாணவர்கள் எல்லாரும் முதல் மதிப்பெண் வாங்கி இருக்கின்றனரா... உயரமாக வளர்ந்து விட்டனரா... சக்திமான்களாக மாறிவிட்டனரா என்பதை யோசிப்பதே இல்லை.

இதில் இன்னொரு அபத்தம் என்னவென்றால், விளையாட்டு வீரர்களை வைத்து, இது போன்ற சத்து மாவுகளுக்கு விளம்பரம் செய்கின்றனர். இதை குடித்தால், நாம் குழந்தைகளும் சிறந்த விளையாட்டு வீரர் ஆகிவிடுவர் என்ற எண்ணத்தில், அந்தப் பொடிகளை கலக்கி, லிட்டர் கணக்கில் குடிக்க கொடுக்கின்றனர். உடல் குண்டானது தான் மிச்சம். விளையாட்டில் பூஜ்யம் தான். விளம்பரப்படி பார்த்தால், நம் குழந்தைகள் சாப்பிட்ட, அன்னிய, பன்னாட்டு நிறுவனங்களின் சத்து மாவு பொடிகளால், ஒலிம்பிக்கில் நாம், 100 தங்கப் பதக்கங்களாவது வாங்கியிருக்க வேண்டும். நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில், இரட்டை இலக்கத்தில் கூட, பதக்கங்களை பெறவில்லையே!
இப்படி சத்து மாவுகளை கலந்து குடித்ததால், குறைந்தபட்சம், குழந்தைகள் நல மருத்துவரிடம் வரும் குழந்தைகளின் எண்ணிக்கையாவது குறைந்திருக்கிறதா என்றால், அதுவும் இல்லை

சத்து மாவு கூழும், ராகி கூழும் தராத பலத்தையா, இந்த சத்துப் பொடிகள் தரப்போகின்றன என, எண்ண வைக்கிறது.

சிலர், பாலோடு சேர்த்து, பிஸ்கட் சாப்பிடுகின்றனர். சர்க்கரை நோயின் எதிரியான மைதாவையும், அஸ்காவையும் மூலப்பொருட்களாக வைத்து தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகள், புறக்கணிக்கப்பட வேண்டிய உணவு பண்டங்களில் முதலிடத்தில் உள்ளன. 'காலையில் எழுந்ததும், சாப்பிடுகிற முதல் நொறுக்குத் தீனி, பிஸ்கட் தான்' என, நம்மில் பலர் பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். எத்தனை பேருக்கு தெரியும்... தேவையற்ற கொழுப்பை உடலில் சேர்ந்து, உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், அந்த பிஸ்கட் என்பது!

உடல் எடையை பற்றி பேசும் போது தான், உடல் எடையை அதிகரிப்பதை தவிர, வேறு எந்த நல்லதையும் செய்யாத, பன்னாட்டு இறக்குமதி மற்றும் உள்நாட்டு தயாரிப்பு, 'சிப்ஸ்' வகைகள் ஞாபகத்திற்கு வருகின்றன

நச்சுக்காற்று:

அந்த சிப்ஸ் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காற்றையும் அல்லவா, நாம் காசு கொடுத்து வாங்குகிறோம். உள்ளே இருக்கும் சிப்ஸ் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக, ஒரு வித நச்சுக் காற்றை உள்ளே செலுத்துவர். குழந்தைகள், அந்த சிப்ஸ் வகைகளை வாங்கிச் சாப்பிடுவதை பெருமையாக கருதுகின்றன; அதன் ருசிக்கு அடிமையாக உள்ளன. அந்த சிப்ஸ் வகைகளில் சிலவற்றை, மெழுகுவர்த்தியில் பிடித்தால், தீப்பற்றி விடும். எந்த ஊரில், தீப்பற்றினால் எரியும் உருளைக் கிழங்கு விளைகிறது என, தெரியவில்லை. உடல் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் நாம் எனக் கருதி, எண்ணெயில் பொரித்தெடுத்த, எந்த பலகாரமும் வேண்டாம் என, முறுக்கு, அதிரசம், தட்டை, உளுந்து வடை என, இன்னும் எத்தனையோ பலகாரங்களை ஒதுக்கி வைக்கிறோம். அந்த சிப்ஸ் வகைகளை விடவா, இந்த பலகாரங்கள் கெடுதல் விளைவிக்கின்றன?

காலையில், சாண்ட்விச், பர்கர்; இரவில் பீட்சா என, வெந்தும், வேகாமல் இருக்கும் அவற்றை உணவாக உட்கொள்கிறோம். ஆனால், வீட்டில் பார்த்து பார்த்து சமைக்கிற உணவு வகைகளை புறக்கணிக்கிறோம். இதையெல்லாம் விட, 'கோழி தான்; ஆனால், கோழி இல்லை...' என, எதையோ, பக்கெட் பக்கெட்டாக விற்கின்றனர். அந்த கடைகளுக்கு கர்ப்பிணி பெண்கள் சென்றால், 'இதை, நீங்கள் சாப்பிட வேண்டாம்' என, அந்த கடைகளில் வேலை பார்க்கும், நல்லெண்ணம் கொண்ட ஊழியர்கள் சிலர்  சொல்கின்றனர்.

சாக்லெட்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பல் மருத்துவரிடம் செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்தே, சாக்லெட் எவ்வளவு தீங்கானது என்பதை அறிந்து கொள்ளலாம். இனிப்பை அதிகமாக விரும்பும் குழந்தைகளுக்கு, கரும்பு சர்க்கரை அல்லது பனை வெல்லத்தை உபயோகித்து செய்யப்படும் நெய் வாழை, எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை போன்ற சத்து மிகுந்த இனிப்பு வகைகளை செய்து கொடுக்கலாமே!

தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய், இலந்த வடை என, இவை எல்லாம், இக்காலத்து குழந்தைகளுக்கு தெரியாமலேயே போய்விட்டதே. இவற்றை குழந்தைகளுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தலாமே!

உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிஸ்கட் வகைகள், சிப்ஸ் வகைகள் மற்றும் இதர தயாரிப்புகளில் பெரும்பாலானவை அன்னிய நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் தான். அதனால் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிப்பவர்களும் அவர்களாகவே இருக்கின்றனர். அது மட்டுமல்ல, ஆரோக்கியமான சருமத்திற்கும், அடர்த்தியான கூந்தலை பெறுவதற்கும், நம் உணவு முறை தான் காரணம் என்பதை மறந்து விட்டோம். இதை இங்கே ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், நொறுக்கு தீனியில் மறைமுகமாக பயனடையக் கூடிய மற்றொரு துறை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்புத்துறை. அவற்றிலும் பெரும்பாலானவை, அன்னிய நாட்டுநிறுவனங்களின் ஆதிக்கத்திலேயே உள்ளன. அவை, இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக கருதுகின்றன. நாமும் அதற்கேற்றாற்போல, முகத்தில் ஒரு சின்ன பரு தோன்றினால் கூட, வீட்டிலிருக்கும் வேப்பங் கொழுந்தை அரைத்து பூசாமல், வேப்பந்தழையை அரைத்து, 'டியூப்'பில் அடைத்து விற்பதை தானே வாங்குகிறோம்!

பொடுகு தொல்லையை போக்கும், 'ஷாம்பு' என, விளம்பரம் செய்கின்றனர். பொடுகு போகிறதோ, இல்லையோ... முடி மட்டும் நிறையவே போகிறது. முகத்திற்கு பயத்த மாவு மற்றும் மஞ்சள்; முடிக்கு அரப்பு மற்றும் சீயக்காய் என, உபயோகப்படுத்திய போது, தோல் மருத்துவரிடம் இவ்வளவு கூட்டம் இருந்ததில்லையே!

புறக்கணியுங்க:

எவ்வளவு விஷயங்களில், நம்மால் ஒன்றும் செய்யாத நிலையில், 'அரசு இப்படி செய்திருக்கலாம்; அப்படி செய்து இருக்கலாம்' என்கிறோம். ஆனால், நம் கையிலும் ஆயுதம் இருப்பதை மறந்துவிடுகிறோம். எதை ஆயுதமாக பயன்படுத்தி, அரசியல்வாதிகள் தேர்தலில் ஜெயிக்கின்றனரோ... பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை, நமக்கே தெரியாமல் ஆளுகின்றனவோ... அது தான்

அந்த ஆயுதம்:

நாம் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணமே, அந்த ஆயுதம். நம்மிடம் இருக்கும் பணத்தை எப்படி செலவழிப்பது என, நாம் தானே தீர்மானிக்க வேண்டும். அன்னிய நாட்டுத் தயாரிப்புகளை புறக்கணித்து, நம் தாத்தா, பாட்டி காலத்து உணவுமுறையை மீட்டெடுத்து விட்டால், நம் பாதங்கள், 'காதி' கடைகளையும், சித்த மருத்துவத்தையும் நோக்கி பயணிக்க ஆரம்பித்தால், அன்னிய நாட்டு நிறுவனங்களின் பாதச்சுவடுகள், காணாமல் போய் விடுமே. வருங்கால இளம் தலைமுறையினர், நோயற்ற வாழ்வு வாழ, வழி வகுப்போம்.

பா.சரண்யா பிரபா

சமூக ஆர்வலர், tamizhachi16@gmail.com
Source : தினமலர் சிந்தனைக் களம் - நஞ்சை உண்ணும் பிஞ்சுகளை காப்போம்!

Sunday, June 1, 2014

படித்ததில் பிடித்தது : அந்துமணி பதில்கள்

'நாங்க அந்தக் காலத்திலே...' என்று கூறி, 'அட்வைஸ்' செய்யும் பெரிசுகளின் தொந்தரவு அதிகமாகி விட்டதே...

சிறியவர்கள், இதைத் தொந்தரவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் அனுபவங்கள் விலைமதிக்க முடியாதவை. 'தீ சுடும்...' என்று, அனுபவப்பட்ட பெரிசு கூறினால், 'இல்லை நானும் அனுபவப்பட்டுத்தான் தெரிந்து கொள்வேன்...' என்பது, எவ்வளவு மூடத்தனம்!


சரி; இது ஒரு பக்கம் இருக்கட்டும். பெரிசுகள், தம்மிடம் யாருமே பேச விரும்பவில்லையே என்ற ஆதங்கத்தில் இருப்பர். அவர்களிடம் ஒரு அரை மணி நேரம் பேசினால், என்ன குறைந்துவிடப் போகிறது!

Saturday, May 17, 2014

படித்ததில் பிடித்தது : அன்புடன் அந்தரங்கம்!


'நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள்' என்று, மனிதர்களுக்கு ஏசு பிரான் கூறுகிறார். நீ, தனியாக அமர்ந்து, உன் எண்ணம் சரிதானா... பக்கத்து வீட்டு ஆணின் பார்வைக்கு நீ ஏங்குவதைப் போல், உன் கணவன், அடுத்த வீட்டுப் பெண்ணின் பார்வைக்கு ஏங்கி, குடும்ப கடமையை மறந்து தவித்துக் கொண்டிருந்தால், உன் மன நிலை எப்படியிருக்கும் என்பதை, உனக்கு நீயே சுயபரிசோதனை செய்.

நடைமுறைக்கு ஒத்து வருகிற நினைப்பு, செயல்களை மாத்திரம் வைத்துக் கொண்டு, நடைமுறைக்கு ஒத்து வராத செயல்களை தவிர்க்க முயற்சி செய்.
வாழ்வியல் நீதி கருத்துள்ள புத்தகங்களை படி; நீ படித்ததில் உள்ள நல்ல விஷயங்களை பிள்ளைகளிடமும், கணவனிடமும் பகிர்ந்து கொள்; தமக்கு கிடைத்தது எதுவோ, அதை வைத்து திருப்தி கொள்ளவும், அதில் சந்தோஷம் காணத் தெரிந்தவர்களே வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர்கள்.

 நீ, உனக்கு கிடைத்த வாழ்க்கையை, உனக்கு மட்டுமே சொந்தமான உறவுகளை நேசி; விட்டுக் கொடு; அதில் சந்தோஷம் கொள். அதை விடுத்து, பக்கத்து வீட்டு ஆணின் பார்வையை நினைத்து, பாயைப் பிராண்டி, உன் வாழ்வை நீயே கெடுத்துக் கொள்ளாதே...

Saturday, April 19, 2014

ஈஸ்டர் பண்டிகை செய்தி !


"நமது வீட்டில் பிள்ளை பிறந்தால் (ஞானஸ்நானம், புதுநன்மை கொடுத்தால்) அதை நமது பணக்கார நண்பர்களுக்குச் சொல்லி அனுப்புவோம். பெரிய பதவியில் உள்ளவர்கள், பணக்காரர்கள் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதை பெருமையாக நாலு பேரிடம் சொல்லிக் கொள்வோம். ஆனால், தேவன் தமது ஒரே பேறான குமாரன் பிறந்ததை எளிய மேய்ப்பருக்குச் சொல்லும்படி செய்கிறார். அவர்கள் வந்து பார்த்ததை ஒரு கவுரவமாக நினைத்தார்."

படித்ததில் பிடித்தது : அன்புடன் அந்தரங்கம்!


'ஆடவர் ஒருவர் கூட, தங்கள் மனைவியை பிரியமாய் நடத்தியதாக தெரியவில்லை... எல்லாருமே தங்கள் அதிகாரத்தை செலுத்துபவராக உள்ளனர்; - என் தந்தை உட்பட...' என்று கூறியிருக்கிறாய்.

நடைமுறைக்கு ஒத்துவராத எதிர்பார்ப்புகள், உனக்கு அதிகம் இருப்பதையே இது காட்டுகிறது; ஆண்கள் உலகத்தை, கலர் கண்ணாடி அணிந்து பார்ப்பதை தவிர். 'ஆண்களே இப்படித்தான்...' என, நினைக்கும் நினைப்பை மாற்றிக் கொள்.

குறைகளும், நிறைகளும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது; இத்தனை சொல்கிறாயே... ஏன் உன்னிடம் குறை என்று எதுவுமே இல்லையா... யோசி.

மனிதர்களிடம் இருக்கும் நல்லனவற்றை நேசி; அப்போது தான், மனதிற்கு அமைதியும், சந்தோஷமும் கிடைக்கும்.

ஆண்கள் பற்றிய உன் தேவையில்லாத பயத்தை தூக்கி எறிந்து, மன மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்.

உன் திருமண வாழ்க்கை நல்ல படியாக அமைய
வாழ்த்துகள்!


என்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Friday, March 14, 2014

Westerners & Europeans are started to stay away from carbonated drinks. When we, Indians gonna change?


 
 
 
The American first lady, Michelle Obama, is on a campaign against obesity, urging Americans to drink more water. Former Mayor Michael R. Bloomberg tried to ban sales of giant-size soft drinks in New York City. And the United States Food and Drug Administration proposed food labels displaying grams of added sugar, including the high-fructose corn syrup used Coca-Cola.

“Carbonated beverages are in precipitous decline,” said John Sicher, publisher of Beverage Digest. “The obesit...y and health headwinds are difficult and are getting stronger.” A Coca-Cola spokesman said the company would increase media spending by up to $1 billion by 2016 to support its brands. But experts say Coke is at a critical juncture. Mr. Lindstrom noted that the average age of a Coke drinker was 56. “They think they’re young when they drink it,” he said. But “young people themselves are turning to alternatives like energy drinks.”

Mr. Lindstrom said surveys indicated that young people did not like highly carbonated drinks. Coke is more heavily carbonated than Pepsi, and roughly twice as carbonated as the energy drinks Red Bull and Monster, which are rapidly gaining market share, especially among the young. The growing appeal of coffee and dark chocolate-infused beverages, especially in Japan and Europe, has shifted the flavor preference toward bitter and away from sweet, Mr. Lindstrom said.

And parents, who in previous generations often introduced their children to Coke, typically when they were ages 6 to 8, have been holding back, largely because of health concerns. Ravi Dhar, professor of management and marketing and director of the Center for Customer Insights at the Yale School of Management, said he noticed, while walking through a room where several dozen undergraduate students were sitting and working in groups, that none was drinking a Coke or a Pepsi.

Source : http://www.todayonline.com/

 

Saturday, March 1, 2014

படித்ததில் பிடித்தது : அந்துமணி பதில்கள்

எதிர்பார்ப்புகளே இல்லை என்றால், ஏமாற்றங்கள் இருக்காது அல்லவா?


எதிர்பார்ப்புகளே இல்லாத வாழ்க்கை சலித்து விடும். முழுமையான வாழ்க்கையாக இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் ஏமாற்றங்களையும் சந்தித்தேயாக வேண்டும்! 

Saturday, February 22, 2014

Something is Fishy about this news: கடன் கொடுத்து ஏமாற்றம் : கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து குடும்பமே தற்கொலைஇந்த நீயூஸ படிச்சா ஏதோ ஸம்திங்க் பிஸ்ஸியா (Fishy) தெரியுதே... ஏதோ தினமலர் கூடவே இருந்து... பார்த்து... நடத்தி வச்ச மாதிரி எழுதியிருக்கு. யாராவது குடும்பத்தோட கடத்தி கொலை பண்ணியிருக்க கூட வாய்ப்பு இருக்கே...


Source:
http://www.dinamalar.com/news_detail.asp?id=921359


Sunday, February 2, 2014

படித்ததில் பிடித்தது : அந்துமணி பா.கே.ப.,


மனோதத்துவப் புத்தகம் ஒன்று படித்துக் கொண்டிருந்தேன்; அதில், மனதைத் தொட்ட ஐந்து பாயின்டுகள் இதோ -

1.நீங்கள் செய்யும் வேலையில், குழந்தையின் உழைப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்; உதாரணம், சைக்கிள் துடைத்தல்.

2.நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு, எப்போதாவது உங்கள் மகனையும், அழைத்துப் போங்கள். 'அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு எல்லாம் வாங்கித் தருகிறார்...' என்று, அவன் அறிந்து கொள்ளட்டும்.

3.குழந்தையிடம் அளவுக்கு மீறி செல்லம் காட்டாதீர்கள்; அதே சமயம், ரொம்பவும் ஆத்திரப்படாதீர்கள்.

4.குழந்தையைக் கட்டிப்பிடித்து விளையாடுங்கள். உங்கள் உடலோடு ஒட்டிப் பழகினால் பாசம் அதிகமாகும்.

5.குழந்தைகள் உங்கள் மீது கோபம் கொள்ளும் போது, அது நியாயமாக இருந்தால் விட்டுக் கொடுங்கள்.

இந்த 5 -யையும் என் அப்பா முழுமையாக செய்திருக்கிறார்.  Thank you Dad!